தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி ஏற்பாடு

தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஐஆர்சிடிசி ஏற்பாடு
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கவுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசியின் உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்தியன் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகின்றன. வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், ஆன்மிக தளங்கள், சுற்றுலா தளங்கள் என 250-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை அழைத்து சென்றுள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, வரும் 30-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயத்துக்கு இயக்கப்படுகிறது. மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரத்து 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுளளது.

இதேபோல், அடுத்த மாதம் 6-ம் தேதியன்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக கங்கா, காசி, கயா, அயோத்தியா, டெல்லி, ஆக்ரா, மதுராவுக்கு இயக்கப்படுகிறது. 12 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு ரூ.9 ஆயிரத்து 940 கட்டணமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

அடுத்த மாதம் 21-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், ஈரோடு, பெங்களூர், சென்னை சென்ட்ரல் வழியாக துவாரகா, பேட் துவாரகா, டாக்கோர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. 10 நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு ரூ.8 ஆயிரத்து 280 கட்டணமாகும்.

தொடர்புக்கு

கட்டணத்தில் ரயில் கட்டணம், சைவ உணவு, தங்குவதற்கு ஹால் வசதி உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக ஆலோசனை பெற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: 044-64594959, 9003140680, காட்பாடி: 9840948484, மதுரை: 0452-2345757, 9003140714, கோவை: 9003140655 ஆகிய எண்களில் பேசலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in