பிஹார் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் மோடி, அமித்ஷா சுற்றுப்பயணம்: முரளிதர ராவ் தகவல்

பிஹார் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் மோடி, அமித்ஷா சுற்றுப்பயணம்: முரளிதர ராவ் தகவல்
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத் தில் சுற்றுப்பயணம் செய்ய இருப் பதாக பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ் கூறியுள்ளார்.

2016 சட்டப்பேரவை தேர்தலுக் காக 234 தொகுதிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமித் துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதி பொறுப் பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டோம். 234 தொகுதி களுக்கும் பொறுப்பாளர்கள் நிய மித்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்து வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். தற்போது கட்சியை பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.

வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தேர் தலை எதிர்கொள்வோம். பிஹார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்வார்கள்.

மாட்டிறைச்சி பிரச்சினையை பாஜகவுக்கு எதிராக மதப்பிரச் சினையாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத் தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மாடுகள் அழிந்தால் விவசாயம் அழிந்து விடும். எனவே, மாடுகள் கொல்லப் படுவதை எதிர்க்கிறோம்.

இவ்வாறு முரளிதரராவ் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in