Published : 17 Dec 2020 03:18 AM
Last Updated : 17 Dec 2020 03:18 AM

கோடியக்கரைக்கு வந்துள்ள இமயமலை கழுகு: வனவிலங்கு ஆர்வலர்கள் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் முதன்முறையாக இமயமலை கழுகு (Himalayan vulture) வந்துள்ளதை இருதினங்களுக்கு முன்பு வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயங்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 5,000 முதல் 7,000 மீட்டர் உயரத்துக்கு மேல் இமயமலை குளிர் பிரதேசத்தில் வாழும் இமயமலை கழுகுகள் தற்போது கோடியக்கரைக்கு வலசை வந்துள்ளன.

இதுகுறித்து திருச்சி பயோ டைவர்சிட்டி கன்சர்வேஷன் பவுண்டேஷனின் விஞ்ஞானி ஏ.குமரகுரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு இமயமலை கழுகுகள் ஏற்கெனவே வந்துள்ளன. குளிர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கும் இவை, முதன் முறையாக கடல்மட்டத்துக்கு குறைவான நிலப்பரப்புக்கு, ஏறத்தாழ 2,500 கிலோ மீட்டர் தொலைவு பறந்து வந்துள்ளன. இந்த வகை கழுகுகள் மிகவும் பெரிய உடலுடன், சிங்கம் போன்று அடர்ந்த முடிகளுடன் இருக்கும்.

நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் தற்போது குளிர்ச்சியான தட்பவெப்ப சூழ்நிலை நிலவுவதால் அவை வந்துள்ளனவா அல்லது வழி தவறி வந்துள்ளனவா என்பது தொடர்பாக, தஞ்சாவூர் வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் ஆய்வு நடைபெற்று வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x