

பொன்னை ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் அடிப்பகுதியில் ஒரு தூண் இடிந்தது. இதையடுத்து, அங்கு ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், கனரக வாகன போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளனர்.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய் தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இது மட்டுமின்றி ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 அணைகளும், சுமார் 180-க்கும் மேற்பட்ட ஏரிகளும் முழு கொள் ளளவை எட்டின.
பொன்னை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பொன்னை - சித்தூர் - வேலூர் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை தொட்டப்படி மழை வெள்ளம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஓடியது. இந்நிலையில், மழை பொழிவு நின்றதால் பொன்னை ஆற்றில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளம் படிப்படியாக குறைந்தது. அப்போது, பாலத்தின் அடியில் நடுப்பகுதியில் உள்ள ஒரு தூண் சேதமடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதை நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். பிறகு, பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் அந்த மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்பு கம்பிகளை காவல் துறையினர் அமைத்தனர்.
இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதியளிக் கப்பட்டது. லாரிகள், பேருந்து கள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாக னங்கள் செல்ல தடைவிதிக்கப்பட் டதால் வாகன ஓட்டிகள் பாதிக் கப்பட்டனர். அதேபோல, ஆந்திரா வுக்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.