2 நாள் போலீஸ் காவல் முடிந்து அட்டாக் பாண்டி மீண்டும் சிறையில் அடைப்பு

2 நாள் போலீஸ் காவல் முடிந்து அட்டாக் பாண்டி மீண்டும் சிறையில் அடைப்பு
Updated on
1 min read

போலீஸ் காவல் முடிந்த நிலை யில் அட்டாக் பாண்டி மீண்டும் பாளை சிறையில் அடைக்கப்பட் டார். மதுரை சிறையில் அடைக் கக்கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் மும்பையில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை போலீஸார் கைது செய்தனர். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின்போது பொட்டு சுரேஷ் கொலைக்கு முன்னர் ஸ்டாலின், அழகிரி, அவரது மகன் துரை தயாநிதி ஆகியோரை சென்னையில் சந்தித்தாக அட்டாக் பாண்டி தெரிவித்ததால், அது குறித்து விசாரிக்க மேலும் 4 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று மேலும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த 2 நாள் காவல் நேற்று மாலையுடன் முடிந்ததையடுத்து அட்டாக் பாண்டியை நீதிபதி பால் பாண்டி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து அவரை அக். 6 வரை பாளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மதுரை சிறை யில் அடைக்கக்கோரி அட்டாக் பாண்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘‘என் தொடர்புடைய வழக்குகள் அனைத்தும் மதுரையில்தான் உள்ளன. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது எனக்கு காலில் வலி ஏற்படுகிறது. மேலும் எனக்கு என்கவுன்ட்டர் அச்சமும் உள்ளது. எனவே என்னை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதி அறிவித் தார். இதையடுத்து அட்டாக் பாண்டி பாளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in