எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்தால் பரிசுத்தொகை: மதுரையில் வினோத போஸ்டர்

எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்தால் பரிசுத்தொகை: மதுரையில் வினோத போஸ்டர்
Updated on
1 min read

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை பிரதமர் மோடி 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டி வைத்தார்.

தொடக்கப் பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 2019 நவம்பர் மாதம் ரூ 5 கோடி ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் முதல் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் கரோனா ஊரடங்கால் பணிகள் தொய்வாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என செல்போன் எண் குறிப்பிடப்பட்டு எங்கே எய்ம்ஸ் என்ற கேள்வி குறி வாசகங்களோடு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி ஆகியோர் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட புகைப்படத்துடன் இந்த நோட்டிஸ் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in