ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி அக்.14-ம் தேதி மருந்து கடைகள் மூடப்படும்: தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தகவல்

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி அக்.14-ம் தேதி மருந்து கடைகள் மூடப்படும்: தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தகவல்
Updated on
1 min read

ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க வலியுறுத்தி வரும் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வன் தெரிவித்தார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

வளர்ந்த நாடுகளில் அரசால் அங்கீகாரம் பெற்று ஆன்லைனில் மருந்து விற்பனை நடக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆன்லைன் வர்த்தகம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதற்கான வசதிகள் இதுவரை செய்து தரப்படாத நிலையில் ஆன் லைனில் மருந்து விற்பனை என்பது நடைமுறை சாத்தியமற்றது.

ஆன்லைன் வர்த்தகத்தில் மருந்து விற்பனை நடைபெறுவ தால், இந்த தொழிலை நம்பி உள்ள 40 லட்சம் பேரும், அவர் களை சார்ந்த 1.5 கோடி பேரும் பாதிக்கப்படுவார்கள். இந்தியா வில் ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை செய்வதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 14-ம் தேதி நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 30 ஆயிரம் மருந்து கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எங்கள் கோரிக்கை மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆன்லைன் மூலம் மருந்து விற் பனை செய்வதைத் தடுக்க வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in