சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக 16 பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’

சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக 16 பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் விதி முறைகளை மீறி பட்டாசு தயாரிப் பில் ஈடுபட்ட 16 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. 98 ஆலை களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களே உள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள் ளது.

குறைந்த காலஅவகாசமே உள் ளதால் குறித்த நேரத்தில் ஆர்டர் களுக்கான பட்டாசுகளை தயாரிப் பதற்காக சில பட்டாசு ஆலை களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் வெடிமருந்து களை கையாளுதல், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர் களை பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுத் துவது, பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாதது, பட்டாசு களை அதிக அளவில் இருப்பு வைத் திருப்பது போன்ற பல்வேறு விதி முறை மீறல்கள் காணப்படுகின்றன.

இதுபோன்ற விதிமுறை மீறல் களால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உண்டு என்பதால் விதிமுறைகளை மீறும் பட்டாசு ஆலைகளில் மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் திடீர் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துகுமரன் கூறிய தாவது: விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 450 பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் விதிமுறைகள் மீறல், பாதுகாப்பு குறைபாடுகள் ஆகியவை இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 98 பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட அளவை விட அதிக அளவில் வெடி மருந்துகளை பயன்படுத்தியது, அனுமதியில்லாத பட்டாசு ரகங்களை தயாரித்தது ஆகிய காரணங்களுக்காக 16 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளன.

அது மட்டுமின்றி, சீனப் பட்டாசு கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்டறிய சிவகாசி யில் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளிலும் வருவாய், காவல் துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in