

தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக 15-ம் தேதி (இன்று) கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
16-ம் தேதி (நாளை) முதல் 18-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஒருசிலஇடங்களில் மிதமான மழையும்,ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.