

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 583 பேர் பலியாகி யுள்ளனர்.
இந்தியாவில் சாலை வசதிகள் மேம்பட்டு வரும் அதே நேரத்தில் சாலை விபத்துகளால் பலியாவோ ரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சாலை விபத்துகளில் மீட்பு பணிகள், சிகிச்சை உள்ளிட் டவைக்காக ஆண்டுக்கு ரூ3.8 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 47 ஆயிரத்து 423 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 423 பேர் பலியாகியுள்ளனர். 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்துகளால் இறப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துகளால் பலியாவோ ரின் பட்டியலில் தமிழகம் இரண் டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 46 ஆயிரத்து 366 சாலை விபத் துகள் நடந்துள்ளன. இதில் 10 ஆயி ரத்து 583 பேர் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறிய தாவது:
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது. சாலை விபத்துக்களை குறைக்க தமிழக அரசு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து சாலை விரிவாக்கம் செய்வது, புதிய சாலைகளை அமைப்பது, பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்வதற்கான நடவடிக்கைகளை யும் எடுத்து வருகிறது.
சாலை விதி மீறல்கள், ஓட்டுநர்களின் கவனக்குறைவு, செல்போனில் பேசியபடி வாகனங் களை ஓட்டுவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்வது போன்ற காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின் றன. அரசின் நடவடிக்கைகளின் பலனாக 2014-ல் விபத்துகளால் பலியானோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 1-ம் தேதிக்கு பிறகு புதிதாக உற்பத்தி செய்யும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை பெரும்பாலான மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டன.
விபத்துகள் குறையும் வாய்ப்பு
தமிழகத்திலும் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. முறையாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் வகையில் கணினி மூலம் கண்காணிக்கும் வசதி 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களால் வரும் நாட்களில் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் குறையும் என நம்பு கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.