

வன்னியர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையை மாற்றவே 20 சதவீத தனி இடஒதுக்கீடு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனதுமுகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் நடப்பு ஆண்டில்நடத்திய குரூப்-1 தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மொத்தம் 6துணை ஆட்சியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர்கூட வன்னியர் அல்ல என்றஉறுதியான தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்துகிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகள் போராடி, 21 உயிர்களை பலி கொடுத்தோம். ஆனால், வன்னியர்களுக்கு மட்டும்20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காமல் 108 சாதிகளுக்கு சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார்கள். இதுதான் நமக்கு எதிரான சதி.
பிற சமூகங்கள் திணிப்பு
இப்போது துணை ஆட்சியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஐஏஎஸ்அதிகாரியாக நிலை உயர்த்தப்படுவர். முதலில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படும் அவர்கள், துறை செயலாளர் பதவி வரை உயர முடியும். அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நமக்கான இட ஒதுக்கீட்டில் பிற சமூகங்கள் திணிக்கப்பட்டன.
உரிய பிரதிநிதித்துவம்
வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தால் 6 துணை ஆட்சியர் பணிகளும் வன்னியர்களுக்கே கிடைத்திருக்கும். தமிழகத்தில் செயலாளர் நிலையில் 100 அதிகாரிகள் இருந்திருந்தால், அவர்களில் குறைந்தது 20 பேராவது வன்னியர்கள் இருந்திருப்பார்கள். நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையை மாற்றி, அனைத்து நிலைகளிலும் குறைந்தது 20 சதவீத பிரதிநிதித்துவம் பெறும் நிலையை உருவாக்கவே வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறோம். எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள். உண்மையான சமூகநீதி போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.