காவிரி தண்ணீர் மறுப்பால் 5 கோடி பேர் பாதிப்பு: திருச்சியில் நாளை அனைத்து விவசாய சங்கங்கள் அவசரக் கூட்டம்

காவிரி தண்ணீர் மறுப்பால் 5 கோடி பேர் பாதிப்பு: திருச்சியில் நாளை அனைத்து விவசாய சங்கங்கள் அவசரக் கூட்டம்
Updated on
1 min read

காவிரி தண்ணீர் தர மறுப்பதால் தமிழகத்தில் விவசாயிகள், பொது மக்கள் என 5 கோடி பேர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங் களின் நிர்வாகிகள் திருச்சியில் அக்டோபர் 24-ம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி நீரை குடிநீராகப் பயன்படுத்தும் 25 மாவட்டங்களின் குடிநீர் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ஏக்கரில் நடைபெற்றுள்ள சம்பா சாகுபடியை இவ்வாண்டு பாதுகாக்க முடியுமா என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை முற்றி லும் செயலிழந்து முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வரை வழங்கப் பட்ட விதை, களைக்கொல்லி, உரங் களுக்கான மானியங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இயந் திரம் மூலம் நேரடி விதைப்பு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மானியம் ரூ.5 ஆயிரம் என அறிவித்துவிட்டு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

இது ஒருபுறம் இருக்க ஓஎன்ஜிசி நிர்வாகம் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், ஷேல் காஸ் உள்ளிட்ட இயற்கை வளங்களை வெளிக்கொணர்வதற்காக புவியியல் ஆய்வு என்ற பெயரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதால் 12 ஆயிரம் அடி வரையிலான கருங்கல் பாறை கள் உடைக்கப்பட்டு அதனால் நிலத்தடி நீருடன் பல வேதிப்பொருட் கள் கலந்து விஷமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றிலிருந்து விவசாயிகளை யும் விவசாயத்தையும் பாதுகாப் பதற்காக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி நிர்வாகி கள் கலந்துகொள்ளும் ஒருங் கிணைப்புக் குழு கூட்டம் திருச்சி யில் நாளை (அக்.24) நடைபெற வுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழக அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் பாண்டியன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in