

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவோம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரையில் முதல்கட்ட சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங் கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காம ராசர் சாலையில் உள்ள தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்க அரங் கில் மகளிர், இளைஞர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடி னார்.
அப்போது அவர் பேசியதாவது:
மதுரையின் சாலைகள் குண்டும், குழியுமாக, குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு. தேர்தலுக்காக இதை நான் சொல்லவில்லை. தெக்கத்திக்காரன் என்ற உணர்வில் கூறுகிறேன். இளைஞர்கள் அரசி யலுக்கு வர வேண்டும். உங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இளைஞர்களை முதலாளிகளாக மாற்ற வேண்டும். சிறு, குறு தொழில்கள் பெருக வேண்டும். மதுரையில் அரை நூற்றாண்டாக நகரின் கலாச்சாரம் அழிகிறது.
மதுரையில் ஜனவரியில் ஜல்லிக்கட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு. நான் தயாராகிவிட்டேன். நீங்களும் தயாராகுங்கள்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரை இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும். இது எங்களின் கடமை. மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்யும் அரசைத்தான் நாம் அமைக்க வேண்டும். மக்களைத் தேடிச்சென்று அரசு சேவை செய்யவேண்டும். அதற்கான அரசு அமைய வேண்டும்.எங்களின் ஒரே வாக்குறுதி நேர்மை. அடுத்த வேலை உணவுக்கு ஏங்குபவனிடம் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வாங்கத்தான் செய்வான். மக்கள் ஆணையிட்டால் ஆட்சி நமதாகும், நாளையும் நமதாகும்.
மதுரையில் இளைஞர்கள், மகளிர், மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். உடன் மாநில நிர்வாகிகள் மகேந்திரன், சந்தோஷ்பாபு, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி. இவ்வாறு அவர் பேசினார்.
மேடையில் கமல்ஹாசனிடம் தொண்டர்கள் கேட்ட கேள்விக ளுக்கு அவர் அளித்த பதில் விவரம்.
ஊழலை ஒழிக்க முடியுமா?
ஊழல் ஒழிப்பு தனி மனிதனால் செய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்போடு நிச்சயம் ஊழலை ஒழிக்க முடியும். துன்பப்படும் மக்களை நான் பார்த்துவிட்டு இறந்தால், எனக்கு நல்ல சாவு கிடைக்காது.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படுமா?
ஆட்சிக்கு வந்தால் அரசு மது விற்பனை செய்யாது. மது விற் பனை தனியாரிடம் ஒப்படைக் கப்படும். மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் வளரும்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பு கூடுமா?
ஆட்சியில் விவசாயிகள் அங்கீகரிக்கப்படுவார்கள். கல்வி கற்றவர்கள் முதலாளிகளாக்கப் படுவர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்படும்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?
நீட் தேர்வு ரத்து செய்யும் விவ காரத்தில் கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுப் போம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் மகேந்திரன், சந்தோஷ்பாபு, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில இளைஞரணி துணைச் செயலர் பரணிராஜன், மகளிரணி மாநில துணைச் செயலர் பத்மா ரவிச்சந்திரன் ஆகியோர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
இதைத்தொடர்ந்து கருப்பா யூரணியில் உள்ள தனியார் மண்ட பத்தில் நிர்வாகிகளுடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார்.