

வேலூர் மத்திய சிறையில் முருகன் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், விரைவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் முருகனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அவர் மீறிய தாக புகார் எழுந்ததால், அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. மனைவி நளினியுடன் வாட்ஸ்-அப் காணொலி காட்சி மூலம் பேசுவதற்கு தடை விதிக் கப்பட்டது. இதை எதிர்த்து, கடந்த மாதம் 23-ம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முருகன் அறையில் சோதனை நடத்தச் சென்ற சிறைக் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்து அவரை மிரட்டியதாக பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே, முருகனின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், முருகனின் உடல் நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
21 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வரும் முருகனுக்கு இதுவரை 4 முறை குளுக்கோஸ் ஏற்றபட் டுள்ளதாக சிறைத்துறை அதி காரிகள் தெரிவித்தனர். தனிச் சிறையில் முருகன் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.