

சென்னையில் தாய், சேய் நலப்பணிகள், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்காக தமிழாக்கம் செய்யவும், பிரவுசிங் மையங்கள் செல்லவும் தங்களது சொந்த பணத்தை செலவிடும் நிலை உள்ளதாக அரசு செவிலியர்கள் கூறுகின்றனர். இந்நிலையை மாற்ற மடிக்கணினிகளை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சுமார் 750 நகர செவிலியர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் அன்றாட பணிகளைத் தவிர அரசு நலத் திட்டப் பணிகள் சிலவற்றிலும் பங்காற்ற வேண்டியுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவித் திட்டத்தில் பணப்பயன்கள் பெறும் பயனாளிகளின் பெயர்களை தமிழாக்கம் செய்யும் பணியும் செவிலியர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னையில் 126 நல வாழ்வு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் பயனாளிகள் பட்டியலை தமிழாக்கம் செய்வதற்காக ரூ.2000 வரை செலவு செய்யப்படுவதாக செவிலியர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு நகர சுகாதார செவிலியர் சங்க தலைவர் ஜெ.சரஸ்வதி கூறியதாவது:
டி.டி.பி. ஆபரேட்டர்களுக்கு தமிழாக்கம் தெரியாததால் ஒவ் வொரு நலவாழ்வு மையத்திலும் ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்து பய னாளிகள் பட்டியலை தமிழாக்கம் செய்கின்ற னர். தாய் சேய் நலத்திட்ட பணி பதிவுகள் அன்றா டம் கணினியில் ஏற்றப் பட வேண்டும் என்பதால் அதையும் எங்கள் செல விலேயே செய்கிறோம்.
மேலும் மூவலூர் ராமாமிருதம் திட்டப் பணிகளும் செவிலியர்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையை தவிர பிற எல்லா மாவட்டங்களிலும் இத்திட்டம் சமூக நலத்துறையின் கீழ் அமல்படுத்தப்படுகிறது.
இத்திட்டப் பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. எனவே கிராம சுகாதார செவிலியர் களுக்கு வழங்கப் பட்டது போல நகர சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.