

விருத்தாசலத்திற்கு பெருமை சேர்க்கும் விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளே தரை மட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் ஆழத்து விநாயகர் கோயில் உள்ளது. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போன்று விநாயகருக்கு இருக்கும் 8 திருத்தலங்களில் இந்தத் திருத்தலமும் ஒன்று. சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி தினங்களின் போது, ஆழத்து விநாயகரை வேண்டி சிதறு தேங்காய் நேர்த்திக் கடன் செலுத்தினால் எண்ணியதெல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இதேபோன்றதொரு கோயில் காளஹஸ்தியில் இருந்தாலும், அதைவிட இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இக்கோயில். கடந்த இரு வாரங்களாக நமது மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த கொடுமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தரைமட்டத்திலிருந்து ஒரு அடி உயரமுள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலிலேயே இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்ததை நாம் அறிவோம்.
ஆனால், மணிமுக்தா ஆற்றை ஒட்டி இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயினுள் தரைமட்டத்திலிருந்து 20 அடி ஆழத்தில் இருக்கும் இந்த ஆழத்து விநாயகர் கோயிலில் தண்ணீர் தேங்கவில்லை என்பதை இத்தருணத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும். தரை மட்டத்திலிருந்து 20 அடிக்கும் கீழுள்ள கோயிலில் வடிகால் வச
தியை தொடர்ந்து பராமரித்து வருவதால் தான் அண்மையில் பெய்த மழையிலும் கோயில் உள்ளே தண் ணீர் இறங்கவில்லை என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.