

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மலை பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்மலை பகுதிகளான உதகையில் 8 டிகிரி, கொடைக்கானலில் 9 டிகிரி,குன்னூரில் 10 டிகிரி, வால்பாறையில் 10.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப் பரப்பு பகுதிகளான தருமபுரியில் 16.8 டிகிரி, வேலூரில் 18 டிகிரி,கரூர் பரமத்தி, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
தற்போது தமிழகம் நோக்கிவடகிழக்கு திசையில் இருந்துதான் காற்று வீசி வருகிறது. கிழக்கு திசைக் காற்று குறைந்து, வடக்குபகுதியில் இருந்து காற்று வீசும்போது, தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தில் இன்னும் வடகிழக்கு பருவ காலம் நீடித்து வருகிறது. வரும் 16, 17 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.