வைகை ஆற்றில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்காமல் தடுப்பு: கோரிப்பாளையத்தில் ரூ.2.5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள்

வைகை ஆற்றில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்காமல் தடுப்பு: கோரிப்பாளையத்தில் ரூ.2.5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள்
Updated on
1 min read

பந்தல்குடி கால்வாயில் இருந்து 10 லட்சம் லிட்டர் கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்காமல் தடுக்க மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.2.5 கோடியில் ராட்சத சுத்திகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை வைகை ஆற்றில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டது. படிப்படியாக தற்போது ஒரளவு கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முழுமையாக இன்னும் கழிவுநீர் கலப்பதை மாநகராட்சியால் தடுக்க முடியாததால் மழை நீருடன் கழிவுநீர், ரசாயனக் கழிவுநீரும் வைகை ஆற்றில் கலக்கிறது.

குறிப்பாக பந்தல்குடி கால்வாய் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் வரை கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. இதைத் தடுக்க மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி பின்புறம் பந்தல்குடி கால்வாயில் ரூ. 2.5 கோடி செலவில் மாநகராட்சி சார்பில் சமூக பொறுப்பு நிதி திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இந்தக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி கடந்த டிசம்பரில் தொடங்கியது. தற்போது ஒரளவு பணிகள் முடிந்ததால் இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வருகிறது.

இதற்காக கோரிப்பாளையத்தில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க பந்தல்குடி கால்வாயில் வரும் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிக்க ராட்சதத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

கழிவு நீர்த்தொட்டிகளில் செலுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீராக வைகை ஆற்றில் வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in