

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், ‘தி இந்து’ குழுமத்தின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ சிறப்பு மலரை நேற்று ரஜினிகாந்த் மகிழ்ச்சியோடு பெற் றுக்கொண்டார்.
‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 45 ஆண்டுகள் ஆகிறது. துணை நடிகர், வில்லன், சிறப்பு தோற்றம் என தன் திரைப் பயணத்தை தொடங்கிய ரஜினி, தன் அபாரத் திறமையால் அடுத்த 5 ஆண்டுகளிலே முன்னணி கதாநாயகனாக மாறினார்.
அடுத்தடுத்த அமோக வெற்றியால் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்ற ரஜினிகாந்த், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக எவராலும் அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறார். காலங்கள் மாறி, வயது கூடினாலும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் ரஜினிகாந்த். இதை அவரது ரசிகர்கள் ‘ரஜினியிஸம்’ என கொண்டாடும் நிலையில், ‘தமிழ் திசை’ பதிப்பகம், ‘சூப்பர் ஸ்டார் 45’ என்ற தலைப்பில் பிரமாண்டமான சிறப்பு மலரைவெளியிட்டுள்ளது.
ரஜினி மகிழ்ச்சி
தமிழக மக்களால் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ரஜினியின்அரசியல் வருகை அண்மையில் உறுதி செய்யப்பட்ட நிலையில்,பாரம்பரியமிக்க ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவந்துள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ மலரை நேற்றுஅவர் ஆர்வத்தோடு பெற்றுக்கொண்டார். மலரை அதே வேகத்துடன் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியோடு வாசித்தார்.
அப்போது உடனிருந்த, ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி ‘சூப்பர் ஸ்டார் 45’ மலர், மிகவும் சிறப்பான தகவல்கள், அரிய புகைப்படங்கள், நேர்த்தியான வடிவமைப்புடன் நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். அதை ஆமோதித்த கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், ‘ரஜினிகாந்த் பற்றிய மிகச் சிறந்த காபி டேபிள் நூலாக இது அமையும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து முக்கிய நிர்வாகிகள் கூறும்போது, ‘ரஜினி சாருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் இருப்பதால் அங்கெல்லாம் இந்த நூல் கொண்டு செல்லப்பட வேண்டும். அந்த அளவுக்கு ரஜினி மலர் அற்புதமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
‘ரஜினி பொக்கிஷம்’
260 பக்கங்கள் கொண்ட ‘சூப்பர் ஸ்டார் 45’ மலரில் ‘அபூர்வ ராகங்கள்’ முதல் ‘அண்ணாத்த’ வரையிலான ரஜினியின் திரைப்பயணம் அங்குலம் அங்குலமாக தொகுக்கப்பட்டுள்ளது. மூத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன், மாஸ் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பன்முக ஆளுமைகளின் பேட்டி, கட்டுரைகளின் வாயிலாக ரஜினியின் திரைவாழ்வை விவரித்திருக்கிறார்கள்.
மேலும், அவரது பூர்வீகக் கிராமமான நாச்சிக்குப்பம், பெங்களூருவில் சிவாஜிராவாக வலம்வந்த நாட்கள், ரஜினியின் ஆன்மிகப் பயணம் பற்றி ரத்த உறவுகள், நெருங்கிய நண்பர்களின் சிறப்பு பேட்டிகள் முத்தாய்ப்பாக அமைந்துள்ளன.
ரஜினி பொக்கிஷமாக விரிந்துள்ள இந்த மலரை ஓவியர் ஏ.பி.தர் தன் கலைவண்ணத்தால் மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். கூடுதல் அம்சமாக, ‘போர் வரும் போது வருகிறேன்’ என ரஜினி அரசியல் பயணம் பற்றி பேசியதை நினைவுகூரும் வகையில் ரஜினி மன்னரைப் போல வாளேந்தி குதிரையில் வரும் ராஜ கம்பீரமான ‘புளோ - அப்’ போஸ்டர், மலருடன் இணைக்கப்பட்டுள்ளது.
சலுகை விலை முன்பதிவு இன்று கடைசி
ரஜினியின் பிறந்தநாளான இன்றுடன் சலுகை விலை முன்பதிவு முடிவடைகிறது. ‘சூப்பர் ஸ்டார் 45’மலரின் விலையான ரூ.275-ல் 20 சதவீத தள்ளுபடியுடன் ரூ.220-க்கு இன்று முன்பதிவு செய்து பெறலாம்.இந்த மலருடன் ஹைதராபாத் மஹேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வழங்கும் தரமான N95 மாஸ்க் இலவசம்.
இந்தியாவுக்குள் அஞ்சல் / கூரியர் மூலம் பெற ஒரு புத்தகத்துக்கு ரூ.30-ம், கூடுதல் புத்தகம் ஒவ்வொன்றுக்கும் ரூ.15 சேர்த்து KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D அல்லது மணி ஆர்டர் மற்றும் செக் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 2. ஆன்லைனில் பெற www.store.hindutamil.in/publications - என்ற லிங்க்கில் முன்பதிவு செய்யலாம்.
மேலும் மொத்தமாக வாங்குபவர்களுக்கான சலுகைகள் குறித்து 7401296562, 7401329402 என்ற செல்போன் எண்களிலும், 98432 25389 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.