

மவுலிவாக்கத்தில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான கட்டிடத்தில் வீடு வாங்கியவர்கள் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பலியானார்கள். இதைத் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் வீடு வாங்கியிருந்த 48 பேர், தங்களுக்கான இழப் பீட்டு பணத்தை வழங்க உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தனர்.
அந்த மனுவில், “விதிமுறை களை மீறி கட்டப்பட்ட மவுலி வாக்கம் கட்டிடத்துக்கு அதிகாரி கள் அனுமதி வழங்கியுள்ளனர். அந்தக் கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக ரூ.20 கோடி அளித்திருந்தோம். அந்த பணத்தை திருப்பித் தரவும், நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அவர்கள் ஒட்டுமொத்தமாக கோரியிருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், “இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்கவில்லை. முழு விசாரணை நடத்தப்பட்ட பிறகே அதிகாரிகள் மீது பொறுப்பை சுமத்த முடியும்.
மேலும் மனுதாரர்கள் நுகர்வோர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, இது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்கவில்லை. முழு விசாரணை நடத்தப்பட்ட பிறகே அதிகாரிகள் மீது பொறுப்பை சுமத்த முடியும்.