கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்த முடிவு

கொடைக்கானலில் பாதரசக் கழிவுகள் குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்த முடிவு
Updated on
1 min read

கொடைக்கானலில் பாதரசக் கழிவு களால் மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக் கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கொடைக்கான லில் இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயா ரிப்பு நிறுவனம் செயல்பட்ட இடத்தை, மாநில கூடுதல் முதன் மைச்செயலர் மற்றும் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் ஸ்கந் தன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரி கரன், எம்.எல்.ஏ.க்கள் பாலபாரதி, வேணுகோபால், இந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனி அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடை பெற்றது. அப்போது, ‘கொடைக் கானல் மலைப் பகுதியில் பாதரசக் கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. குறைந்தது 10 டன் வரை பாதரசக் கழிவுகள் இருக்க வாய்ப்புள்ளது.

இதை முழுமையாக அப்புறப் படுத்த வேண்டும். ஒரு கிலோ மண்ணை எடுத்து பரிசோதித்தால், அதில் 20 மில்லிகிராம் பாதரசக் கழிவுகள் இருக்கும். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, குழந்தைப்பேறு இல்லாமை ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் இறந்து விட்டனர். நிறுவனம் மீதான வழக்கு 12 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதுவரை எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

அரசு, தொழிலாளர்கள், நிறு வன அதிகாரிகள் என 3 தரப்பி னரும் அமர்ந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்’ என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் எம்எல்ஏ பாலபாரதி கூறியதாவது: இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடந்த அக்டோபர் 13-ம் தேதி கடிதம் அனுப்பி இருந் தேன். பாதரசக் கழிவுகள் குறித்து கண்டறிய அமைக்கப்படும் நிபுணர் குழுவை கண்காணிக்க உள்ளூரில் ஒரு குழு அமைக்க வேண்டும். முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். பாதிக் கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என அவர் கூறினார்.

ஸ்கந்தன் கூறியதாவது: கொடைக்கானலில் பாதரசக் கழிவு கள் இருப்பதாக வந்த புகாரை யடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவர்களின் கோரிக்கைகள் குறித்து நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in