அமெரிக்காவின் விருதுபெற்று திரும்பிய மீனவப் பெண்ணுக்கு வரவேற்பு

அமெரிக்காவின் விருதுபெற்று திரும்பிய மீனவப் பெண்ணுக்கு வரவேற்பு
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீகாலஜி என்ற அமைப்பு செயல்படுகிறது. கடல் சார் வளங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு, இந்த அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ‘சீகாலஜி’ என்கிற விருது வழங்கப்படுகிறது.

கடல்வளங்களைப் பாதுகாத்த தற்காக கடந்த ஆண்டுக்கான ‘சீகாலஜி’ விருது வழங்கும் விழா, கலிபோர்னியாவில் கடந்த அக். 8-ம் தேதி நடைபெற்றது. அதில் ராமேசுவரம் அருகே பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண்மணி லட்சுமிக்கு சீகாலஜி விருதை அதன் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் வழங்கினார். இந்த விருதுடன் ரூ. 6.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ‘சீகாலஜி’ விருது பெறுவது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க கடல்சார் விருது பெற்று லட்சுமி, சென்னையில் இருந்து பாம்பனுக்கு ரயில் மூலம் புதன்கிழமை பகல் 11 மணியளவில் வந்தார்.

பாம்பன் ரயில் நிலையத்தில் மீனவர் மகளிர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சார்பில் லட்சுமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பாம்பன் ரயில்வே நிலையத்தில் இருந்து சின்னப் பாலம் சுனாமி குடியிருப்பில் உள்ள லட்சுமியின் வீடு வரை யிலும் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பும் நடைபெற்றது.

செய்தியாளர்களிடம் லட்சுமி கூறியதாவது: இந்த விருதுடன் கிடைத்த பணத்தை, பாசி சேகரிக் கும் மீனவ மகளிர் கூட்டமைப் புக்கும், அவர்களின் குழந்தை களின் கல்விக்கும் அளிக்கப் போகிறேன். கடல் வளத்துக்கு பாதிப்பில்லாமல் பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களுக்கு, அரசு தரப்பில் இருந்து கடலில் மூழ்கி நீச்சல் அடிக்கப் பயன்படும் ஸ்கூபா சாதனங்கள், பைபர் படகு கள் தர வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in