திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: ‘அண்டாவ காணோம்’ நாயகன் மீது பெண் புகார்

திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்: ‘அண்டாவ காணோம்’ நாயகன் மீது பெண் புகார்
Updated on
1 min read

திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய தாக நடிகர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.

‘அண்டாவக் காணோம்’ படத்தில் நாயகனாக நடித்தவர் இளையராஜா. அவர் மீது சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் ஹேமலதா(28) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத் தில் நேற்று ஒரு புகார் கொடுத் துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:

நான் தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியை சேர்ந்த இளையராஜா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் மதுரவாயலில் ஒரே வீட்டில் வசித்தோம். இளையராஜா சில திரைப்படங்களில் நடித்திருக் கிறார். ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.

கருக்கலைப்பு

இளையராஜாவின் தாய் கண்மணி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் எனது வீட்டில் 3 மாதங்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் நான் கருவுற்றேன். அப்போது இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், அவர் ஹீரோ ஆகும்வரை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறி, எனது கருவை கலைக்க வைத்தனர்.

இந்நிலையில் குடும்பத்துடன் தேனிக்கு சென்ற அவர்கள் திரும்பி வரவே இல்லை. போனில் தொடர்பு கொண்டபோது, இளையராஜாவுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினர். என்னை திருமணம் செய்து என்னுடைய பணம் ரூ.5 லட்சத்தையும் வாங்கி மோசடி செய்துவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவர் முயற்சிக்கிறார். இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in