

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் அதிமுக அவர்வசம் சென்றுவிடும் என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சசிகலா வெளியே வந்துவிட்டால் அதிமுகவின் தலைமை சசிகலாவிடம் சென்றுவிடும். அவர் தேர்தலில் நிற்க முடியாவிட்டால் பொறுப்புகள் அனைத்தும் டிடிவி.தினகரன் வசம் சென்றுவிடும்.
ரஜினியின் செயல்பாடுகள் அனைத்தும் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளன. முழுக்க முழுக்க பாஜகவின் சாயலாக ரஜினி செயல்படுகிறார் என்பது அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரிகிறது.
வரும் தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு மட்டும் தான் போட்டி. திமுக கூட்டணியில் புதிதாக அரசியல் கட்சிகள் சேர வாய்ப்புள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.