

பசும்பொன்னில் உள்ள முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடம் அமைந் துள்ளது. இங்கு முத்துராமலிங்கத் தேவரின் 53-வது குருபூஜை, 108-வது பிறந்த நாள் விழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆன்மிக விழாவாகவும், இரண் டாவது நாள் (அக்.29) அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று அரசு சார்பில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
இதையொட்டி நினைவிடத்தில் நேற்று காலை 8.35 மணியளவில் மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், செல்லூர் கே.ராஜு, ஆர்.காம ராஜ், எஸ்.சுந்தரராஜ், ஆர்.பி.உதய குமார், சி.விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் முருகையா பாண்டியனும் காலை 9.30 மணியளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் அதன் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராம லிங்கம், சுப.தங்கவேலன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு உள் ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தேசிய செயலர் திருநாவுக்கரசர். மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலர் வைகோ, மாவட்டச் செயலர் ராஜா, பாமக சார்பில் கட்சியின் நிறுவனர் ராம தாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக சார்பில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.டி.ராஜா, தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் பிடி அரசகுமார், தேசிய தெய்வீக முற்போக்கு கழகத்தின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சிற்றரசு தேவர், இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல்தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.