

காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரிடம் பைப் வெடிகுண்டு, கத்தி ஆகியவற்றைக் காட்டி மிரட்டி ரூ.1 கோடி கேட்டவரைப் போலீஸார் கைது செய்தனர். காரைக்குடி பர்மா கால னியைச் சேர்ந்தவர் மாங்குடி. சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவரான இவர், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராகவும், காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது வீட்டுக்கு தமிழ்தேசம் மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்கு மரன்(38) என்பவர் நேற்று காலை வந்தார். அவர் மாங்குடியிடம் ரூ.1 கோடி கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்குமரன் கைப்பையில் வைத்திருந்த 2 பட்டாக் கத்திகள், பைப் வெடி குண்டு, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை டேபிள் மீது வைத்து மிரட்டியுள்ளார்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸாருக்கு மாங்குடி தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுந்தரமகாலிங்கம் தமிழ்குமரனை கைது செய்து, அவரிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினார். தமிழ்குமரனிடம் சிவகங்கை மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ரோஹித்நாதன், கூடு தல் எஸ்.பி. முரளிதரன், டிஎஸ்பி அருண் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டின் தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர்.
ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டில் வெடிகுண்டு வீசப்போவதாக துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த வழக்கில் தமிழ்குமரன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.