

நடிகர் விஷால் மீதான தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு விஜயகாந்த் பேசியதாவது:
நடிகர் விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் 3 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட நடிகர் சங்கத் தேர்தலுக்கு காவல் துறை இவ்வளவு பாதுகாப்பு அளித்துள்ளது. ஆனால், எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றனர். எனக்கு எனது ரசிகர்களும், பொதுமக்களும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.