

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, 136.70 அடியாக இருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 134.10 அடியாக இருந்தது. நேற்று காலையில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 136.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2781.58 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சேர்வலாறு நீர்மட்டமும் 3 அடி உயர்ந்து 149.11 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 103.70 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1762 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 445 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35.75 அடியாகவும் இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 18 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 24.50 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு வினாடிக்கு 53.46 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறபகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 32, சேர்வலாறு- 56, மணிமுத்தாறு- 10.6, அம்பாசமுத்திரம்- 6.20, ராதாபுரம்- 1.