Last Updated : 10 Dec, 2020 04:09 PM

 

Published : 10 Dec 2020 04:09 PM
Last Updated : 10 Dec 2020 04:09 PM

கோவை அருகே எஸ்பிபி வனம்; சிறுதுளி அமைப்பின் சார்பில் தொடக்கம்

எஸ்பிபி வனத்தைத் தொடங்கி வைத்த திரைப்பட நடிகர் விவேக் மற்றும் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே, மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக, எஸ்பிபி வனம் உருவாக்க விழா இன்று நடைபெற்றது.

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப். 25ஆம் தேதி மறைந்தார். இசையை விரும்பும் ரசிகர்களின் மனதில், பல ஆயிரம் பாடல்களின் வாயிலாக நீங்காத இடம் பிடித்து இருந்த அவரது மறைவு, திரைத்துறையினர், இசையை விரும்பும் மக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், சமீபத்தில் மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக 'எஸ்பிபி வனம்' உருவாக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று (டிச.10) பச்சாபாளையத்தில் உள்ள ஆபீசர்ஸ் காலனியில் நடைபெற்றது.

கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான விவேக், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு, எஸ்பிபி வனத்தைத் தொடங்கி வைத்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 74 வயதைக் குறிப்பிடும் வகையில், 1.8 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை மரம், தேக்கு மரம், மூங்கில் மரம், பண்ருட்டி பலா, சந்தன மரம், மா மரம், கருங்காலி மரம், மஹோகனி உள்ளிட்ட இசைக் கருவிகள் உருவாக்கப்படும் மரக்கன்றுகள் 74 என்ற எண்ணிக்கையில், இசைக் குறியீடு வகையில் வடிவமைத்து நடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x