தலைமை அலுவலகம் இடமாற்றம்: குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு

தலைமை அலுவலகம் இடமாற்றம்: குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு

Published on

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இயங்கி வந்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக சாந்தோமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் (Chennai Metro Water) நிர்வாக அலுவலகக் கட்டிடம் தற்போது சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பம்பிங் ஸ்டேஷன் சாலை (மே தினப்பூங்கா அருகே) செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள கட்டிடத்தைப் புதுப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், தரைதளத்தில் இயங்கிவரும் 24/7 புகார் மையம் தவிர்த்து இக்கட்டிடத்தில் இயங்கிவந்த அனைத்துப் பிரிவுகளும் கீழ்க்கண்ட முகவரிக்கு டிச.15 முதல் தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நகர் நிர்வாகக் கட்டிடம்,

முதல் தளம் முதல் நான்காவது தளம் வரை,

எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர்,

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

044-4567 4567, 044-2845 1300 முதல் 044-2845 1318.

பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு சென்னைக் குடிநீர் வாரியத்தின் நிர்வாக அலுவலகத்தை டிச.15 முதல் புதிய முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in