

புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அதற்கான தேதியை டிச.31-ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கவும் ஆதரவு தெரிவிக்கவும் அவரது வீடு நோக்கி ஏராளமானவர்கள் தினமும் திரண்டு வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் ரஜினி வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரது வீடு இருக்கும் தெரு பகுதியிலும், வீட்டின் முன்பும் 15 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தெருவின் நுழைவு பகுதியில் தடுப்பு அமைத்து அத்தெருவிலுள்ள வீடுகளின் உரிமையாளர்களின் வாகனங்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.
மேலும், முன் அனுமதி பெற்றோரின் வாகனங்கள் மட்டுமே ரஜினி வீட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரஜினி வீட்டை சுற்றி ரோந்து போலீஸாரும் கண்காணித்து வருகின்றனர்.
முன் அனுமதி பெற்றோரின் வாகனங்கள் மட்டுமே ரஜினி வீட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.ரோந்து போலீஸாரும் கண்காணித்து வருகின்றனர்.