61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
Updated on
1 min read

சென்னை: கடலில் மீன்​வளத்​தை பெருக்க, அவற்​றின் இனப்​பெருக்க காலத்தை முன்​னிட்டு ஒவ்​வோர் ஆண்​டும் கோடை​காலத்​தில், நாட்​டின் கிழக்கு கடற்​கரை​யில் அமைந்​துள்ள தமிழகம், ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களில் ஏப்​.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையி​லான 61 நாட்​கள் விசைப்​படகு மீனவர்​கள், மீன் பிடிக்க கடலுக்​குச் செல்ல மத்​திய அரசு தடை விதித்​துள்​ளது.

அதே​போல், கேரளம் உள்​ளிட்ட மேற்கு கடற்​கரைப் பகு​தி​களில், அரபிக் கடலில் ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்​களுக்கு மீன்​பிடி தடைக்காலம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக கடலோர பகு​தி​யில் மீன்​பிடி தடைக்காலம் நில​விய​தால், விசைப்​படகு மீனவர்​கள், ஆழ்​கடலில் மீன்​பிடிக்​கச் செல்​ல​வில்​லை.

இந்த தடைக்​காலத்​தில் தங்​கள் படகு​கள், வலைகளைச் சீரமைக்​கும் பணி​கள், படகு​கள் மற்​றும் இயந்​திரங்​களில் பழுது நீக்​குதல் போன்ற பணி​களில் மீனவர்​கள் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில், மீன்​பிடி தடைக்​காலம் நாளை (ஜூன் 14) இரவுடன் நிறைவடைகிறது. எனவே ஆழ்​கடலில் மீன்​பிடிக்க விசைப்​படகு மீனவர்​கள் தயா​ராகி வரு​கின்​றனர்.

அதன்​படி, சென்னை காசிமேடு மீன்​பிடித்துறை​முகம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், தஞ்​சாவூர், திருவாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுச்​சேரி, கரைக்​கால், புதுக்​கோட்​டை, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, ராம​நாத​புரம், கன்​னி​யாகுமரி ஆகிய கடலோர மாவட்​டங்​களில் இருந்து 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மீனவர்​கள் கடலுக்​குச் செல்ல தயா​ராகி வரு​கின்​றனர்.

பழுதுநீக்​கப்​பட்ட படகு​களை கடலில் இறக்​குதல், அவற்​றில் வலைகளை மடித்து ஏற்​று​தல், ஐஸ் பெட்​டிகளைக் கொண்டு செல்​லுதல்,இயந்​திரங்​களைப் பொருத்​துதல், டீசல் நிரப்​புதல், சமையல் செய்​வதற்கு தேவை​யான மளிகை பொருட்​களை கடைகளில் வாங்​குதல் போன்ற பணி​களில் மீனவர்​கள் நேற்று ஈடு​பட்​டனர். நாளை நள்​ளிரவு 12 மணிக்கு ஆழ்​கடலுக்கு உற்​சாகத்​துடன்​ புறப்​பட உள்​ளனர்​.

61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
மக்களவையில் உண்மையான ‘டிஎம்சி' என உரிமை கோர சபாநாயகரை சந்திக்கும் அதிருப்தி எம்.பி.க்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in