Last Updated : 20 Oct, 2015 09:52 AM

 

Published : 20 Oct 2015 09:52 AM
Last Updated : 20 Oct 2015 09:52 AM

துறைரீதியாக சில பணிகளை திருநங்கைகள் ஏற்பதில்லை: சமூக நலத்துறை தகவல்

துறைரீதியாக சில பணிகளை வழங்க முன்வந்தாலும் அவற்றை திருநங்கைகள் ஏற்பதில்லை என சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்தார். சராசரி குடும்ப தலைவனைவிட எங்களுக்கு செலவுகள் அதிகமாக இருப்பதால், ரூ.10 ஆயிரம் சம்பளம் தரும் வேலைக்கு செல்ல முடிவதில்லை என விளிம்பு நிலை திருநங்கைகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஓடும் ரயில்களில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்பதாக புகார் கூறப்படும் நிலையில், நாளுக்கு நாள் பெருகிவரும் சூப்பர் மார்க் கெட்டுகளில் திருநங்கைகள் ஏன் பணியில் சேர்ந்து சம்பாதிக்கக் கூடாது என்று ‘தி இந்து-உங்கள் குரலை’ தொடர்பு கொண்ட வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் லலிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: துறைரீதியாக சில பணிகளை திருநங்கைகளுக்கு வழங்க, அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் வரமறுக்கின்றனர். அடை யாள அட்டைகள் பெரும்பாலும் திருநங்கைகளுக்கு வழங்கப் பட்டுவிட்டது. அவர்களுக்கான கூட்டங்களையும் நடத்தி வருகி றோம். அதில் அரசின் திட்டங்களை எடுத்து கூறுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பெயர் சொல்ல விரும்பாத திருநங்கைகள் சிலர் கூறியதாவது: எங்களுக்கும் எல்லை உண்டு. எல்லா திருநங்கை களும் ரயிலில் பயணிகளிடம் காசு கேட்பது கிடையாது. நீங்கள் சொல்வது போல 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் மட்டுமே காசு கேட்கிறோம். ஏனெ னில் அவர்களின் பாக்கெட் மணியில் சில ரூபாய்கள் எங்க ளுக்கு அளிக்கின்றனர். குடும்ப பொறுப்பு உள்ளவர்களை நாங்கள் தொந்தரவு செய்வது கிடையாது.

இதேபோல பாலியல், டோல் கேட் வசூல், கடை வசூல் இப்படி எங்களுக்குள் எல்லை பிரித் துக் கொண்டோம். யாரும் அடுத்த வருடைய எல்லைக்குள் நுழைய மாட்டோம். சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம் பாதிக்கிறோம்.

இதில் எங்களின் நாயக் என்கிற தலைவிக்கும், தங்குமிடத்துக்கும் பணம் கட்டியாகவேண்டும். இது போக மீதமுள்ள தொகை எங்க ளின் அன்றாட செலவுகள் மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா என செலவாகிவிடுகிறது. படித்த சிலர் நல்ல வேலைக்கு, அதாவது அதி காரம் செய்யும் வேலைக்கு செல்லலாம். அவர்கள் வருவாய் எங்களைவிட அதிகமாக இருக்கும்.

மாதம் ரூ.10 ஆயிரம் சம்பள மாக தரும் அரசு, தனியார் பணிக்கு விளிம்பு நிலையில் உள்ள எந்த திருநங்கையும் செல்ல மாட்டார்கள். எங்களால் அந்த அடிப்படை ஊழியர் பணியினை செய்ய முடியாது. அந்த சம் பளம் எங்களுக்கு போதாது. சராசரி குடும்ப தலைவனைவிட எங்க ளுக்கு செலவுகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால் 90 சதவீத திருநங்கைகள் யாரை யும் கட்டாயப்படுத்தி காசு கேட் பதில்லை என்று அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x