

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 129.45 அடியாக இருந்தது. இன்று காலையில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 134.10 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 4298.96 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டமும் 141.60 அடியிலிருந்து 146.09 அடியாக உயர்ந்திருந்தது.
118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2357 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 35 அடியாகவும் இருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 105.29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறபகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 23, சேர்வலாறு- 7, மணிமுத்தாறு- 10.6, நம்பியாறு- 3, அம்பாசமுத்திரம்- 15, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 3.50, பாளையங்கோட்டை- 2.40, திருநெல்வேலி- 2.