பி.எட். படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு

பி.எட். படிப்புக்கு 2-வது கட்ட கலந்தாய்வு
Updated on
1 min read

பி.எட். படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 14-ம் தேதி தொடங்குகிறது. இதன்மூலம் ஏறத்தாழ 800 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 1700 பி.எட். இடங்களை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கியது. இக்கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. 900 இடங்களுக்கு மேல் நிரம்பியுள்ள நிலையில் சுமார் 800 இடங்கள் காலியாக உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோ பர் 14, 15, 16-ம் தேதிகளில் நடத்தப் படும் என்று தமிழ்நாடு பி.எட். மாண வர் சேர்க்கை செயலாளர் பேராசி ரியை பாரதி தெரிவித்தார். பி.எட் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 1-ம் தேதி தொடங் கின. கலந்தாய்வு முடிவில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவ- மாணவிகள் உடனடியாக அறி வுறுத்தப்பட்டிருப்பதாகவும் பேராசிரியை பாரதி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in