‘நிவர்’ புயல் பாதிப்புகள் குறித்த 2 நாள் ஆய்வு நிறைவு; முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை: தமிழகத்துக்கு உரிய நிவாரணத்தை பரிந்துரைக்க வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் அணுக்கம்பட்டு கிராமத்தில் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தை  முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி விவசாயிகள் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காட்டி தங்கள் பாதிப்பை எடுத்துரைத்தனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் அணுக்கம்பட்டு கிராமத்தில் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி விவசாயிகள் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காட்டி தங்கள் பாதிப்பை எடுத்துரைத்தனர்.
Updated on
1 min read

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம், பாதிப்புகளுக்கு உரிய நிவா ரணத்தை பரிந்துரைக்க முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் கடந்த நவ.25-ம் தேதி நிவர் புயல், தொடர்ந்து டிச.3-ம் தேதி புரெவி புயல் என இரண்டு புயல்களால், பலத்த காற்று மற்றும் அதிகனமழை பெய் தது. இதனால், தமிழகத்தின் கட லூர், நாகை, திருவாரூர், விழுப் புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகள வில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் மீட்பு, நிவாரணத்துக்காகவும் அமைச்சர்களை நியமித்துள்ள முதல்வர் பழனிசாமி, பயிர் இழப்பு களை கணக்கிடவும் உத்தரவிட்டுள் ளார். இதுதவிர உயிரிழப்பு, வீடு, கால்நடை இழப்புகளுக்கும் நிவா ரணங்களை அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், மத்திய அரசின் சார்பில், மத்திய உள்துறை இணைச் செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 8 அதிகாரிகளை கொண்ட குழுவினர் கடந்த 5-ம் தேதி சென்னை வந்தனர். அன்றே தலைமைச் செயலர் கே.சண்முகம், வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் பாதிப்பு களுக்கான உடனடி நிவாரணமாக ரூ.650 கோடி, இதர பாதிப்புகளை சீரமைக்க ரூ.3,108 கோடி என ரூ.3,758 கோடியை வழங்க வேண் டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டது.

அதன்பின், டிச.6, 7 ஆகிய இரு தினங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கட லூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் 2 பிரிவாக சென்று ஆய்வு நடத்தினர். அங்கு பாதிப்புகளை கணக்கிட்டனர்.

தொடர்ந்து நேற்று காலை தலை மைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வரு வாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செய லர் கே.சண்முகம், வருவாய்த் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திரரெட்டி மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங் கேற்றனர்.

முன்னதாக, மத்திய குழுவின ரிடம் தமிழக அரசு சார்பில் ரூ.3,758 கோடிக்கான நிவாரணத் தொகை கோரப்பட்டுள்ள நிலையில், தமி ழகத்தில் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் முதல் வர் பழனிசாமி, ஆய்வின் அடிப் படையில் உரிய தொகையை வழங்க பரிந்துரைக்கும்படி கேட் டுக் கொண்டார். மேலும், நிவர் புயலைத் தொடர்ந்து புரெவி புய லால் ஏற்பட்டுள்ள சேதங்களையும் முதல்வர் பழனிசாமி விளக்கியதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மத்திய குழுவினரிடம் முதல்வர் பழனிசாமி பேசி முடித்துவிட்டு, கடலூர் புறப்பட்டுச் சென்றார். அதன் பின், தலைமைச் செயலர் உள் ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் பிற்பகல் வரை ஆலோசனை நடத்திவிட்டு, அதன்பின் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in