

வில்லிவாக்கம், ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்தவர் அசாருதீன். இவர் அதே பகுதியில் உள்ளஜவுளிக்கடை ஒன்றில் பணி செய்து வருகிறார்.
இவரது மனைவி கவுஸீபி (26). 4 மாத கர்ப்பிணியான இவர், அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு ஸ்கேன் ரிப்போர்ட்டை தனது கணவரிடம் காண்பித்துள்ளார். பின்னர் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த கார், அவர் மீது மோதியுள்ளது. இதில், கவுஸீபி சம்பவ இடத்திலேயே இறந்தார். வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரின் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார், வருமானவரித் துறைக்கு சொந்தமானது என்பதும், அந்தகாரை ஒரு பெண் ஓட்டி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது. விபத்துநிகழ்ந்ததும் அந்த காரை அங்குவிட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடியிருப்பதும் தெரியவந்துள்ளது.
காரை ஓட்டி வந்தது வருமானவரித் துறை அதிகாரியா அல்லது அவரது ஓட்டுநரா என்பது குறித்துஅந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.