

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட பழங்கால சிலைகளை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
தமிழக கோயில்களில் இருந்துதிருடப்பட்ட பழங்கால சிலைகளைசிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி வருகின்றனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் சிலைகளும், பல்வேறு இடங்களில் கைப்பற்றப்படும் சிலைகளும் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ளசிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுஅலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்படும் சிலைகளில் பெரும்பாலானவை, அவைதிருடப்பட்ட கோயிலுக்கே திரும்ப ஒப்படைக்கப்படும். வழக்கு நிலுவையில் இருக்கும் சிலைகள் மட்டும் அலுவலக வளாகத்திலேயே வைக்கப்படும். கிண்டி அலுவலகத்தில் தற்போது சுமார் 250 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது தொல்லியல் துறையின் சான்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இதனால் பறிமுதல் செய்யப்படும் அனைத்து சிலைகளையும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து சிலையின் தொன்மை குறித்து சான்று அளிப்பர்.
அதன்படி, கிண்டி அலுவலகத்தில் உள்ள 250 சிலைகளில் 22 சிலைகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் இருந்தன. அந்த 22 சிலைகளையும் மத்திய தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். சுமார் ஒருமணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த சிலைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது தொல்லியல் துறையின் சான்றையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.