

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணை ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு நிரம்பியது.
தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள் நிரம்பி வருகின்றன. நீர்பிடிப்புப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் ஒட்டன்சத்திரம் அருகே 90 அடி உயரம் கொண்ட பரப்பலாறு அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 300 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் நங்காஞ்சியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் கன மழையால் மலைச்சாலையில் பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தாண்டிக் குடி- பன்றிமலை-தர்மத்துப்பட்டி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாற்றுச் சாலை யாக மூன்று நாட்களுக்கு பன்றிமலை-ஆடலூர்- கே.சி.பட்டி- பாச்சலூர்- ஒட்டன்சத்திரம் வழி யாகவும், பன்றிமலை-ஆடலூர்-கே.சி.பட்டி-தடியன்குடிசை-பெரும்பாறை-சித்தரேவு வழியாக வும் பயணிக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.