ஆயுர்வேத மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதற்கு எதிர்ப்பு: விருதுநகரில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆயுர்வேத மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதற்கு எதிர்ப்பு: விருதுநகரில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

ஆயுர்வேத மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுநகரில் இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபாளையம் கிளைத் தலைவர் ஜவகர்லால் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர் சுகுமார், இந்திய மருத்துவ சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டச் செயலர் அறம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் ரூபன்ராஜ், சிவகாசி கிளைச் செயலர் சண்முகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஆயுர்வேத மருத்துவர்களும் நவீன அறிவியல் அறுவை சிகிச்சைகளை,பயிற்சி எடுத்துக் கொண்டு செய்யலாம் என்ற வழிகாட்டுதலை கண்டித்தும், நிதி ஆயோக்"ஒரே நாடு ஒரே மருத்துவ முறை" என்ற முறையில் ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பை உருவாக்க அமைத்துள்ள கமிட்டிகளை கலைக்க வலியுறுத்தியும், தேசிய கல்வி கொள்கை 2020 கூறப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வியில் பக்கவாட்டு நுழைவு முறையை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய மருத்துவ சங்கத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட பொருளளர் ஜெயராமன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு விருதுபெற்ற ராஜபாளையம் மருத்துவர் கணேசன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in