வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி
Updated on
1 min read

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள நாளை (அக். 24) கடைசி நாளாகும்.

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர் கள் (அதாவது 1998 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, திருத்தங்களுக்கு படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதியில் முகவரி மாற்றத்துக்கு 8-ஏ, திருத்தங்கள் மேற்கொண்டு புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 001 ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த செப்டம்பர் 20, அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகத்தில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் கள் நடைபெற்றன.

இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

பெயர்கள் சேர்க்க, நீக்க, திருத் தங்கள் மேற்கொள்ள உள்ளாட்சி அலுவலகங்களில் மட்டுமல்லாமல், >www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமும், EASY என்ற கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in