அஸ்தினாபுரம், கொத்திமங்கலம், செம்பாக்கம் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் ஆய்வு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்

செம்பாக்கம் திருமலை பிள்ளை பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று குறைகளை கேட்டறிந்தார். படம்: எம்.முத்துகணேஷ்
செம்பாக்கம் திருமலை பிள்ளை பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று குறைகளை கேட்டறிந்தார். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

கனமழை காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில் மழை பாதித்தபகுதிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் வளர்மதி ஆகியோர் தாம்பரம், செம்பாக்கம், அஸ்தினாபுரத்தை அடுத்ததிருமலை நகர், திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு ஆய்வு செய்ய வந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு புயல் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 2 ,500 பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in