Published : 19 May 2014 10:30 AM
Last Updated : 19 May 2014 10:30 AM

உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு- 7 மாடி உயரம், 77 டன் எடை

அர்ஜென்டினாவில் உலகின் மிகப்பெரிய டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இதுவரை கண்டறி யப்பட்ட டைனோஸர்களிலேயே இதுதான் மிகப்பெரியதாகும்.

14 ஆப்பிரிக்க யானைகளுக்கு இணையானதும், 7 மாடி அளவுக் குப் பெரியதுமான இந்த டைனோ சர்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா, லா பிளெச் சாவுக்கு அருகிலுள்ள பாலை வனத்தில் விவசாயி ஒருவர் இந்த எலும்புகளை முதன்முதலா கப் பார்த்தார்.

இதையடுத்து, எகிடியோ பெரூக்லியோ தொல்லுயிர் ஆய் வியல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த, தொல்லியல் ஆய்வாளர் கள் டைனோசரின் எலும்புகளை அகழ்ந்து எடுத்து வருகின்றனர்.

இதுவரை 150 எலும்புகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர் “டைட்டனோசர்” எனும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது. 65 அடி உயரம், 130 அடி நீளம், 77 ஆயிரம் கிலோ எடையை உடையது என தொல்லி யல் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இதுவரை கிடைத்த டைனோசர் தொல்படிவங்களில் இதுதான் மிகப்பெரியதாகும்.

இதுதொடர்பாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், “இதுதான் இப்பூமியில் உலவிய மிகப்பெரும் உயிரினமாகும். தலையிலிருந்து வால் வரை 40 மீட்டர் நீளமுடையது. தன் நீண்ட கழுத்தை இது உயர்த்தியிருக்கும் நிலையில், 20 மீட்ட உயர முடையது. தோரயமாக 7 மாடிக் கட்டிடத்தின் உயரமிருக்கும்.

புதைபடிவங்களுடன் கிடைத்த பாறைகளின் வயதினைக் கணக் கிட்டுப் பார்த்தால், 9.5 கோடி அல்லது 10 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த உயிரினம் பாட கோனியா வனப்பகுதியில் வாழ்ந் திருக்கக் கூடும்” எனத் தெரி வித்துள்ளனர்.

இதற்கு முன் கண்டறியப்பட்ட மிகப்பெரும் டைனோசரான ஆர் ஜென்டீனாசரஸின் எடை 70 ஆயிரம் கிலோ என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x