

அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலையை அறியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார். கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ளும் நேரம் வந்துள்ளதால் அவர் இவ்வாறு பேசுகிறார்.
சுரப்பா மீது ஊழல் புகார் எழுந்ததுமே தமிழக அரசு விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது. என்னிடம் எந்த ஊழலும் இல்லை. எனவே, எந்த விசாரணையையும் எதிர்கொள்வேன் என்று கூறிய சுரப்பா தற்போதுநீதிமன்றத்தில் வழக்கு தொடுத் துள்ளார். மடியில் கனம் இல்லாத வருக்கு வழியில் பயம் ஏன்?
பேராசிரியர் நியமனம் தொடர்பாக ஏற்கெனவே முன்னாள் துணைவேந்தர் கொடுத்த பேட்டிக்காக, அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் ஏதேனும் பேச வேண்டுமென கமல்ஹாசன் பேசுகிறார்.
இறுதி ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று (டிச.7) முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இணையவழியில் தேர்வுகள்
இறுதியாண்டு மாணவர்கள் செய்முறை வகுப்புகள் மேற்கொள்ள ஆய்வகம் தேவைப்படு கிறது. அதற்காக இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று காலம் முடியாததால், தேர்வுகள் இணைய வழியிலேயே நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.