சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு: விளைச்சல் சரிந்ததால் வரத்து குறைந்தது- ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை

சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு: விளைச்சல் சரிந்ததால் வரத்து குறைந்தது- ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை
Updated on
1 min read

வரத்து குறைந்ததால் சென்னையில் தக்காளி விலை திடீரென உயர்ந்து ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.20-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.25-க் கும் விற்கப்பட்டது. அதன் விலை திடீரென உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி மொத்த விற்பனையில் ரூ.30-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.40-க் கும் விற்கப்பட்டது. ஜாம்பஜார், வியாசர்பாடி மார்க்கெட்களில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது.

திடீர் விலை உயர்வு குறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரி தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தின் தக்காளி தேவையை வெளி மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த வாரத்தில் தினமும் 70 லோடு தக்காளி வந்தது. தற்போது 50 லோடாக குறைந்துவிட்டது. வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது’’ என்றார்.

விளைச்சலைக் கெடுத்த மழை

வரத்து குறைந்தது பற்றி தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கர்நாடகம், ஆந்திரத்தில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு தக்காளி வருகிறது. கர்நாடகம், ஆந்திரத்தில் பல இடங்களில் பருவமழை குறைந் துள்ளது. ஆந்திர எல்லைப் பகுதிகள் மற்றும் ஓசூர், கிருஷ் ணகிரி ஆகிய இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக பருவம் தவறி தற்போது மழை பெய்கிறது. இத னால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி குறைந்துள்ளது. இதனாலேயே வரத்து குறைந்தது’’ என்றார்.

கொடுங்கையூரை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் இதுபற்றி கூறியதாவது:

காய்கறி விற்பனைக்காக சில கைபேசி செயலிகள் (App) உள்ளன. அதில் ‘2 கிலோ நாட்டு தக்காளி ரூ.68, அரை கிலோ பெங்களூர் தக்காளி ரூ.18’ என்று கூறப்படுகிறது. வெளி சந்தையைவிட குறைந்த விலையில் கிடைப்பதால், கைபேசி செயலி மூலம் தக்காளி ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளேன். வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி கொடுத்து விடுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in