

குடியாத்தம் அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி, 31 குண்டு களுடன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த கோவிந்தா புரம் பகுதியில் வசிப்பவர் சந்திரன் (68). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவிந்தாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை வாங்கி வைத் துள்ளார்.
இதற்கிடையில், தனது குடும்பத் துடன் நேற்று முன்தினம் சிதம்பரத் துக்கு சென்றவர் நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டிருந்தது. அதில், வைத்திருந்த கைத்துப் பாக்கியை காணாததால் அதிர்ச்சியடைந்த சந்திரன், குடியாத் தம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தரன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது, பாதுகாப்பு அறையில் வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கியுடன் குண்டு களை நிரப்பி துப்பாக்கியில் பயன் படுத்தும் இரண்டு ‘கேட்ரேஜ்’ மற்றும்31 குண்டுகளும் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், மூன்று கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராகாட்சிப் பதிவுகள் அடங்கிய ‘ஹார்டுடிஸ்க்’ உள்ளிட்டவற்றை திருடிச் சென்றிருப்பது காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சந்திரன் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.