

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால் யாருடைய வாக்குகளும் பிரியாது என திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி தெரிவித்தார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணம் திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது. பூ வியாபாரிகள், வர்த்தகர்கள், கரும்பு விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், இரு சக்கர வாகன பழுது பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி கலந்துரையாடினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருவண்ணாமலை நகரில் உள்ள பூ மார்க்கெட் பகுதிக்கு சென்று பூ வியாபாரிகளை சந்தித்தோம். அப்போது அவர்கள், எங்களது வாடகை உயர்ந்துள்ளது என்றனர். 500 ரூபாய் வாடகை செலுத்தி வந்த தாங்கள், ரூ.7 ஆயிரம் செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக கூறினர்.
நல வாரியமே இல்லை
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நலவாரியம் அமைத்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது, அந்த வாரியம் எங்கு உள்ளது என தெரியவில்லை. நல வாரியமே இல்லை என வர்த்தகர்கள் குற்றஞ் சாட்டி உள்ளனர். கரோனா காலத் தில் 45 நாட்களுக்கு மேலாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டி ருந்தன. அந்த காலக்கட்டத்திலும் வரியை செலுத்த வேண்டும் என கூறி கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளனர்.
வரிகளால் அவதிப்படும் வர்த்தகர்கள்
திமுக ஆட்சிக்கு வரும்போது எங்களது குறைகளை தீர்க்க வேண் டும் என அனைத்துத் தரப்பு மக்க ளும் வலியுறுத்தினர். அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள், முழுமை பெறாத பாதாள சாக்கடைத் திட்டம் உட்பட பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்தும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சி தொடங்குவது என்பது அவரவர் உரிமை. அந்த உரிமையின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதால், யாருடைய வாக்குகளும் பிரியாது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவிப்பது என்பது அவரது உரிமை.
அவருக்கு எதிராக அரசாங்கமே விசாரணை கமிஷனை அமைத்துள் ளது” என தெரிவித்தார். அப்போது தி.மலை மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.