வேளாண் சட்டங்களை எதிர்த்து நெல்லையில் இடதுசாரி கட்சிகள் மறியல்: 48 பேர் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து நெல்லையில் இடதுசாரி கட்சிகள் மறியல்: 48 பேர் கைது
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் டில்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் தழுவிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயற்சி செய்தபோது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து சாலையில் அமர்ந்து மத்திய அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in