

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் இன்று மிதமான மழை நீடித்தது. அதிகபட்சமாக சேர்வலாறு அணைப்பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணிக்கு பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 53, மணிமுத்தாறு- 55, நம்பியாறு- 6, கொடுமுடியாறு- 5, அம்பாசமுத்திரம்- 33, சேரன்மகாதேவி- 19.20, நாங்குநேரி- 23, பாளையங்கோட்டை- 53, ராதாபுரம- 22, திருநெல்வேலி- 32.
பாபநாசம் அணை நீர்மட்டம் 123.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1074 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து 384 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 602 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது.
சேர்வலாறு நீர்மட்டம் 129.46 அடியிலிருந்து 132.68 அடியாக உயர்ந்திருந்தது. வடக்குபச்சையாறு நீர்மட்டம் 19-ல் இருந்து 20 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடி, கொடுமுடியாறு நீர்மட்டம் 34.75 அடியாகவும் இருந்தது.