முதல்வர் உருவ பொம்மை எரித்து சாலை மறியல்: விருதுநகரில் அதிமுகவினர் கல் வீசியதால் பரபரப்பு

முதல்வர் உருவ பொம்மை எரித்து சாலை மறியல்: விருதுநகரில் அதிமுகவினர் கல் வீசியதால் பரபரப்பு
Updated on
1 min read

வேளாளர் என அரசாணை வெளியிடப் பரிந்துரை செய்வதாக அறிவித்த தமிழக முதல்வர் பழனிசாமியைக் கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் விருதுநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சிறையில் அடைக்கக்கோரி அதிமுகவினர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட 7 சாதி உட்பிரிவுகளை ஒன்றிணைத்து வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளிட்டோர் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விருதுநகர் பஜார் போலீசார் கைது செய்து நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அப்போது தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக நகரச் செயலர் நைனார், ஒன்றியச் செயலர்கள் கண்ணன், தர்மலிங்கம், அதிமுகவைச் சேர்ந்த கோகுலம் தங்கராஜ் உள்பட ஏராளமானோர் குறிப்பிட்ட திருமண மண்டபம் முன் திரண்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் மண்டபத்தின் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் பிரிக்கப்பட்டனர். அதிமுகவினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in